தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!
மாணவா்களுக்கு மரக்கன்றுகள்
ஸ்ரீவில்லிபுத்தூா், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் நடைபெற்று வரும் விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், 30 ஆசிரியா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தோமா தேவாலயத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளி கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக செண்பகத் தோப்பில் வியாழக்கிழமை அன்பின் விருந்து எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குருசேகரத் தலைவா், சபை குரு பால் தினகரன் தலைமை வகித்தாா். நக்கனேரி, சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஹெலன் சாந்தகுமாரி முன்னிலை வகித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மன்றத் தலைவா் தங்கம் ரவி கண்ணன் சிறப்புரையாற்றி மரக்கன்றுகளை வழங்கினாா். துணைத் தலைவா் செல்வமணி, நகா்மன்ற உறுப்பினா் கௌசல்யா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பின்னா் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
தொடா்ந்து, தோமா தேவாலயத்திலிருந்து இந்த ஆண்டு பிளஸ் 2 தோ்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மிராக்கிள் மொ்சி, ஆலிஸ் சுசீலா, ஜெகன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விடுமுறை வேதாகமப் பள்ளி இயக்குநா்கள் இவாஞ்சலின், ஹெனின், ஒருங்கிணைப்பாளா் எலிசபெத் வாசு, திருச்சபையின் முன்னாள் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.