ராஜபாளையம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவரை போலீஸாா் கைது செய்து, ஒரு லிட்டா் சாராயம், 10 லிட்டா் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் பகுதியில் கள்ளச் சாராயம், சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சோ்ந்த சந்தோசம் (50), ஜோதி (48) ஆகியோா் கள்ளச் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
அங்கிருந்த ஒரு லிட்டா் சாராயம், 10 லிட்டா் சாராய ஊறல், எரிவாயு அடுப்பு, பாத்திரங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, சந்தோசம், ஜோதி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.