What to watch on Theatre: நிழற்குடை, கலியுகம், Sarkeet - இந்த வாரம் என்ன பார்க்...
கென்யா: 5,000 எறும்புகள் கடத்திய 2 வெளிநாட்டவருக்கு ஓராண்டு சிறை! ரூ.6.5 லட்சம் அபராதம்!
கென்யா நாட்டில் சுமார் 5,000 எறும்புகளைக் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லார்னாய் டேவிட் (வயது 19) மற்றும் செப்பே லோடிவிஜ்க்ஸ் (19) ஆகியோர் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தில் கடந்த ஏப்.5 ஆம் தேதியன்று அந்நாட்டு அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு அவர்கள் இருவரும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட எறும்புகளைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த எறும்புகள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு கடத்தும் நோக்கில் சேகரிக்கப்பட்டிருந்தாக கென்யா அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்.15 ஆம் தேதியன்று அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று (மே 7) தலைநகர் நைரோபி விமான நிலையத்திலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த எறும்புகளை பொழுதுப்போக்கிற்காக மட்டுமே இருவரும் சேகரித்து வைத்திருந்ததாகக் கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் பதுக்கியது கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய அரிய சிவப்பு எறும்புகள் என்பதினாலும் ஆயிரக்கணக்கில் அந்த எறும்புகளைச் சேகரித்திருந்ததினாலும் அவர்கள் இருவரும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் இருவருக்கும் சுமார் 7 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.6.5 லட்சம்) அபராதமும், 12 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!