பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினி பாராட்டு
இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு இஸ்ரேல் உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ருவென் அசாா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று சுட்டிக்காட்டி வெளியிட்ட பதிவில், ‘தங்கள் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு உள்ள உரிமைக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் எங்கு சென்றும் ஒளிந்து கொள்ள முடியாது என்பதை அவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.