"நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என..." - சொல்கிறார் தய...
பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லாமல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியிருக்கிறது. இதற்கான விண்ணப்ப்பதிவுக்கான இணையதளங்களும் தொடங்கப்பபாட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.