செய்திகள் :

"நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என..." - சொல்கிறார் தயாரிப்பாளர் சமந்தா!

post image

சமந்தா 'சுபம்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் சமந்தா ஒரு கேமியோ கேரக்டரிலும் நடித்திருக்கிறாராம்.

Subham - Samantha Produced Movie
Subham - Samantha Produced Movie

இத்திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் தற்போது சமந்தா ஈடுபட்டு வருகிறார்.

அப்படி ப்ரோமோஷனுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளராக அவர் சந்திக்கும் விஷயங்கள் தொடர்பாக பேசியிருக்கிறார்.

சமந்தா பேசுகையில், "நடிகையாக இப்போதுதான் ஒரு வெள்ளிக்கிழமை எப்படி இருக்குமென எனக்கு தெரிகிறது.

இதுதான் ஒரு தயாரிப்பாளராக எனக்கு முதல் வெள்ளிக்கிழமை. அதிகப்படியான பயத்துடன் இப்போது நான் இருக்கிறேன்.

இப்போதுதான் ஒரு தயாரிப்பாளர் சந்திக்கும் உண்மையான சவால்கள் பற்றி எனக்கு தெரிய வருகிறது. கடந்த வாரத்திலிருந்து உறக்கமில்லாத இரவுகளை செலவழித்து வருகிறேன்.

எங்களுடைய குழுவும் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். 'சுபம்' திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது.

எனக்கு அப்படத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கை இருக்கிறது. நடிகையாக பல விஷயங்களை சாதித்திருக்கிறேன்.

Samantha
Samantha

அதுமட்டுமின்றி அதிகப்படியான மக்களின் காதலும் எனக்கு கிடைத்திருக்கிறது. இருப்பினும், எப்போதும் எனக்குள் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.

நான் சினிமாவிலிருந்து எடுத்த இடைவேளை சமயத்தில் பல விஷயங்கள் குறித்து யோசித்தேன்.

அந்த நேரத்தில் நடிப்பு வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. மேலும் மீண்டும் திரைப்படங்களுக்கு வருவேனா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.

அப்போதுதான் தயாரிப்பு என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தேன்.

நான் இந்தத் துறையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இருக்கிறேன்.

இந்த அனுபவத்துடன், ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்தேன்.

எந்தப் பிரமாண்ட அறிவிப்பும் இல்லாமல் அமைதியாகப் படத்தைத் தொடங்கினோம்.

எட்டு மாதங்களில் படப்பிடிப்பை முடித்தோம். இப்போது பார்வையாளர்களுக்கு இதை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

நடிகையாக இருந்தபோது, தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை நான் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

Samantha
Samantha

ஒரு காட்சி கூட திட்டமிட்டபடி நடக்காவிட்டால், பணம் மற்றும் நேரம் ஆகிய இரண்டிலும் பெரிய இழப்பு ஏற்படலாம்.

இப்போது, படப்பிடிப்பில் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

'சுபம்' படத்திற்கு தேவையான அளவு மட்டுமே செலவு செய்தோம். மக்கள் இதைப் பார்க்கும்போது, எதுவும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலவு செய்யப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

ஒவ்வொரு கதையும், திரைக்கதையும் அதற்கேற்ற பட்ஜெட்டைக் கொண்டிருக்கும், அதை நாங்கள் கடைப்பிடித்தோம்." எனக் கூறினார்.

``படித்துக்கொண்டே நடிக்கிறேன்... தெலுங்கு கற்றுவருகிறேன்" - லவ் டுடே நடிகை இவானா

'லவ் டுடே' படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் இவானா. தொடர்ந்து பலத் தமிழ் படங்களில் நடித்துவரும் இவர், தற்போது ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள "சிங்கிள்" படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவிருக்கி... மேலும் பார்க்க

Allu Arjun: ``நான் நடிச்சதுல 18 படம் பாக்ஸ் ஆபிஸ்ல..'' - அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குநர் அட்லியுடன் இணைந்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்... மேலும் பார்க்க

Vijay Devarakonda: `பழங்குடிகளை அவமதிக்கும் கருத்து' - விஜய் தேவரகொண்டா மீது வழக்கறிஞர் புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானப் படம் ரெட்ரோ. இந்தப் படத்தின் புரோமோஷன் விழா ஏப்ரல்... மேலும் பார்க்க

HIT 3 Review: ஒரு கன்டெய்னர் துப்பாக்கி; 2 லாரி கத்தி; பல லிட்டர் ரத்தம்; ஹிட்டடிக்கிறதா இந்த ஹிட்?

அர்ஜுன் சர்கார் (நானி), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ட்ரிட்டான போலீஸ் அதிகாரி. இவர் HIT என்கிற Homicide Intervention Team என்கிற குற்றவாளிகளைத் தண்டிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையிலும் இருக்கிறார். ... மேலும் பார்க்க

Allu Arjun: `வயது ஏறிக்கொண்டே போகிறது, அதனால்..!' - WAVE மாநாட்டில் நடிகர் அல்லு அர்ஜூன்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்பார்... மேலும் பார்க்க

Sree leela: "இதயத்தைக் கொள்ளை கொள்ளும் தருணம்" - மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்த நடிகை ஶ்ரீ லீலா

நடிகை ஶ்ரீ லீலா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளுக்கும் பேன் இந்தியன் நட்சத்திரமாகப் பயணித்து வருகிறார்.தற்போது அவர் மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்.அந்தக் குழந்தையின் புகைப்படத்தைத் ... மேலும் பார்க்க