வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
Allu Arjun: `வயது ஏறிக்கொண்டே போகிறது, அதனால்..!' - WAVE மாநாட்டில் நடிகர் அல்லு அர்ஜூன்
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், World Audio Visual and Entertainment மாநாட்டில் "Talent Beyond Borders" என்ற நிகழ்வில் நடிகர் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இது சரியான நேரம்
அதில், ``ஹாலிவுட் படங்கள், கொரிய படங்கள், ஈரானிய படங்கள், சீன படங்கள் என உலகில் உள்ள ஒவ்வொரு திரைப்படத் துறையும் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்மிடமும் இவ்வளவு பெரிய திரைப்படத் துறை உள்ளது. நாம் பல ஆண்டுகளாக இங்கு இருக்கிறோம். ஆனால் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இது சரியான நேரம் என நினைக்கிறேன்...
உலகளவில் நாம் சாதிக்க ஒரே வழி..!
இந்தியத் திரைப்படத் துறையும் விரைவில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் சாதனை நிகழ்த்தும். வரும் ஆண்டுகளில் இந்திய திரைப்படத் துறை உலகளாவிய முத்திரையைப் பதிக்கும். "புஷ்பா 2: தி ரைஸ்" திரைப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து, பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்தது. உண்மையான கதைகளைச் சொல்வதன் மூலம் இதை சாதிக்கலாம். உள்ளூர் கதைகளைச் சொல்வதுதான் உலகளவில் நாம் சாதிக்க ஒரே வழி.

நான் ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியின் நடிகன். ஆனால் "புஷ்பா" வெற்றிக்குப் பிறகு அது மாறிவிட்டது. குறைந்த பட்சம் இப்போது அனைவருக்கும் என் முகம் தெரியும்... எனவே இது ஒரு நீண்ட பயணம். போட்டி நிறைந்த உலகில், ஒவ்வொரு குறிப்பிட்ட கட்டத்திலும் பார்வையாளர்களுக்கு சிறந்ததை வழங்க வேண்டும். ஒரு நடிகருக்கு நடிப்பு மட்டும் போதாது. திரைத் துறையின் பல்வேறு துறைகளில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வயது ஏறிக்கொண்டே போகிறது!
இந்தி, மலையாளம், தமிழ், கனடா என அனைத்து மொழிகளிலும் பல அற்புதமான நடிகர்கள் உள்ளனர். அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடனம் எனக்கு இயல்பாக வருகிறது... நான் ஒருபோதும் நடனத்திற்காகப் பயிற்சி பெற்றதில்லை. இப்போது வயது ஏறிக்கொண்டே போகிறது, திறமையை கூர்மைப்படுத்த இன்னும் பயிற்சி செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எனவே, எனது சிறந்த நடிப்பை வழங்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 69 ஆண்டுகால தெலுங்கு திரையுலகில், 20-வது படத்தில் தேசிய விருதை வென்ற தெலுங்கு நடிகர் நான்.
இப்போது நான் பணியாற்றும் படத்தின் இயக்குநர் அட்லிக்கும் எனக்கும் ஒரே மாதிரியான மனநிலை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்" என்றார்.