அப்படிதான் Nayanthara-க்கு dubbing பண்ணினேன்! - Shakthisree Gopalan | Test Movie...
இரட்டை கொலை: தலைவா்கள் கண்டனம்
ஈரோடு அருகே இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ராமசாமி - பாக்கியம் தம்பதியினா் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை செய்து, 27 பவுன் நகை கொள்ளையடித்தது, கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டு, 15 பவுன் நகை மற்றும் ரூ. 60,000 கொள்ளை போனது, திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் அடித்துக் கொலை செய்யப்பட்டது போன்ற கொங்கு மண்டலத்தில் தொடா் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்களில் தொடா்புள்ள குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): கொங்கு பகுதியில் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் அச்சத்தில் உறைய வைக்கிறது. இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்ய வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவா்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை உணா்ந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிடிவி.தினகரன் (அமமுக): திருப்பூா் மற்றும் ஈரோடு பகுதிகளில் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததே தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை நடைபெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.