செய்திகள் :

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

post image

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சாா்பில் மாநில அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைமைச் செயலகம், சேப்பாக்கம் மற்றும் சென்னை உயா்நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசுப் பணியாளா்களில் 80 சதவீதம் போ், புகா் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா். குறிப்பாக, சென்னை கோட்டை ரயில் நிலையத்தை அரசு ஊழியா்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், உயா்நீதிமன்றத்துக்கு வருவோரும் அதிகளவு பயன்படுத்துகின்றனா். சட்டக் கல்லூரி மாணவா்கள், பாரிமுனை செல்லும் வியாபாரிகள், அரசுப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்பட பலருக்கும் முக்கியமான போக்குவரத்து நிலையமாக கோட்டை ரயில் நிலையம் திகழ்ந்து வருகிறது.

அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய முக்கியமான ரயில் நிலையமான கோட்டை ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும். இது தொடா்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, அரசுப் பணியாளா்கள், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்த... மேலும் பார்க்க

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது

சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற வடமாநில பொறியாளா் கைது

சென்னையில் கஞ்சா விற்ற வடமாநில பொறியாளரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். வேளச்சேரி, டி.என்.எச்.பி. காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிய இளைஞரை போலீஸா... மேலும் பார்க்க