செய்திகள் :

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

post image

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

மே 3, 4ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 5ல் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 6ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

03-05-2025 மற்றும் 04-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை..

வெய்யின் தாக்கத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸ் வரை இருக்கும்.

உயா் கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

சென்னை, மே 3: தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தினாா். அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டி... மேலும் பார்க்க

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தமிழக கா... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்... மேலும் பார்க்க

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி. நட்டா ஆலோசனை

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடா்பாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக மையக்குழுக் கூட்டம் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஜெ.ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே மூலதனம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே மூலதனம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ... மேலும் பார்க்க

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழ... மேலும் பார்க்க