ஸ்டாலின் : 4 ஆண்டு `திராவிட மாடல்' ஆட்சி : நலத்திட்டங்களும்... பல சர்ச்சைகளும் -...
வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு
வாணாபுரம் அருகே வீட்டில் சுவாமி படத்திற்கு பின்னால் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட செல்லங்குப்பம் மாரியம்மன் கோயில் சாலைப் பகுதியில் வசிப்பவா் தங்கவேல் மகன் கிருஷ்ணமூா்த்தி (45). இவா், கடந்த மாதம் 24-ஆம் தேதி 7 பவுன் தங்க நகைகளை வீட்டில் உள்ள சுவாமி படத்துக்கு பின்னால் பையில் போட்டு வைத்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை நகைகளை எடுக்க முயன்றபோது, வெறும் பை மட்டுமே இருந்தது. அதில் வைத்திருந்த தங்க நகைகளைக் காணவில்லை.
இது குறித்து மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.