செய்திகள் :

Operation Sindoor: 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல்; பஹாவல்பூரைக் குறிவைக்க என்ன காரணம்?

post image

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அப்போதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே வார்த்தைப்போர் தொடங்கியது.

ஒருகட்டத்தில் இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் 'மக்களுக்குப் போர் பாதுகாப்புப் பயிற்சி வழங்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்தான் `ஆப்பரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.

Operation Sindoor
Operation Sindoor

இந்தத் தாக்குதலில் 5 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 பாகிஸ்தானிலும் இருந்த தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய இந்த முப்படை தாக்குதல் நடவடிக்கையில் 'எந்த பாகிஸ்தான் ராணுவ தளங்களும் தாக்கப்படவில்லை' எனவும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தளம், முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) தளம் ஆகிய இடங்கள் முக்கியமானவை.

ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் 1999-ல் விடுவிக்கப்பட்டதிலிருந்து, பஹாவல்பூர் நீண்ட காலமாக ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

இது தொடர்பாக வெளியான தகவலில், தீவிரவாதிகளின் தளங்களைத் துல்லியமாக உளவுத்துறை அமைப்புகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ-தொய்பா தலைமையகத் தளங்களை இந்தியப் படைகள் தாக்குதல்களுக்கான இடங்களாகத் தேர்வு செய்தன.

மேலும், தீவிரவாத முகாம்களைக் குறிவைக்கச் சிறப்புத் துல்லிய வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு

தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் ... மேலும் பார்க்க

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்த... மேலும் பார்க்க

Operation Sindoor: `இந்திய ராணுவ நடவடிக்கையை வரவேற்கிறேன்; அதேசமயம் இது..."- திருமாவளவன் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்க... மேலும் பார்க்க

`போர் வேண்டாம்; பாகிஸ்தான் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்... பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட்... மேலும் பார்க்க