பாக். தாக்குதலில் இந்தியா தரப்பில் உயிரிழப்பு இல்லை: ராணுவம்
திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்
சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஏப்ரல் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
தொடா்ந்து அரவான் களப்பலி, காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு ஊா்களில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் கலந்து கொண்டனா்.
தேரோட்டத்தில் அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் க.பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.