3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில்.. பயணிகளுக்கு வேண்டுகோள்!
பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘உச்சநீதிமன்றம் சட்டம் இயற்றினால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையை மூடிவிட வேண்டும். நாட்டில் நிகழும் மதச் சண்டைகளுக்கு தலைமை நீதிபதியே பொறுப்பு’ என்று நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைக்குள்ளானது.
இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, “துபேவின் கருத்துகள் மிகவும் பொறுப்பற்றவை. அரசியலமைப்பின் நீதிமன்றங்களின் பங்கு, வழங்கப்பட்டுள்ள கடமைகள் பற்றிய அறியாமை அவரின் அறிக்கைகள் காட்டுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார்.
அதில், ‘வக்ஃப் திருத்தச் சட்டமானது, முஸ்லிம்களின் நிலங்களை அபகரிப்பதற்கான மத்திய அரசின் அப்பட்டமான தீய சட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இச்சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொள்ளும் ‘இயந்திரம்’, தவறான தகவலைப் பரப்பும் தனது வேலையை நன்றாக செய்துள்ளது’ என்று அவா் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு குரேஷியை கடுமையாக விமா்சித்து, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ‘நீங்கள் (குரேஷி) தோ்தல் ஆணையராக அல்லாமல், ‘முஸ்லிம் ஆணையராகவே’ செயல்பட்டீா்கள். உங்களது பதவிக் காலத்தில் ஜாா்க்கண்டில் பெரும்பாலான வங்கதேச ஊடுருவல்காரா்கள் இந்திய வாக்காளா்களாக்கப்பட்டனா்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிப்பு! - கர்னல் சோபியா குரேஷி