பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
காஷ்மீர் மக்களை காத்து நிற்கும் `S-400 சுதர்சன் சக்ரா' அதிநவீன பாதுகாப்பு பற்றி தெரியுமா?
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் வான்வழி தாக்குதலை நடைபெற்றுவருகிறது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலமாகவும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல்தாக்குதல் நடத்தி வருகிறது. அவற்றின் அதிவேக விமானங்களை வழிமறைத்து வீழ்த்துகிறது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு.
அதில் மிக முக்கியமானது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட S-400 சுதர்சன் சக்ரா என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு. இது நேற்றைய தினம் 15 ட்ரோன்களை வீழ்த்தியிருக்கிறது.
S-400 பாதுகாப்பு அமைப்பு
ஆசியாவிலேயே இந்த பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதனால் 600 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகனைகளை கண்காணிக்க முடியும், 400 கிலோமீட்ட எல்லைக்குள் வரும் ஏவுகனைகளை தடுத்து தாக்குதல் நடத்த முடியும்.
இந்தியா ரஷ்யா இடையே S-400 பாதுகாப்பு அமைப்பு தொகுப்புகளுக்காக 35,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
S-400 Sudarshan Chakra air defense missile system pic.twitter.com/XbuQjV8gh2
— Mohit Chauhan (@mohitlaws) May 8, 2025
வாங்கப்பட்ட அனைத்து S-400 தொகுப்புகளும் இந்திய விமானப்படையின் கீழ் செயல்பாட்டில் உள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் இவற்றை நிறுவியுள்ளனர்.
ரஷ்யாவிலிருந்து வரவிருந்த மேலும் சில தொகுப்புகள் உக்ரைன் போரால் தடைபட்டுள்ளன.
ஹார்ப்பி ட்ரோன்கள் (HARPY Drones)
ஹார்ப்பி ட்ரோன்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியிருக்கின்றன.
இந்த ட்ரோன்கள் ரேடார் அமைப்புகளை சேதப்படுத்தி, 'எதிரி வான் பாதுகாப்புகளை அடக்க்கும் (SEAD)' வேலையைச் செய்கின்றன.
இதில் பெரும் வெடிப்பை ஏற்படுத்தும் ஏவுகணைகள் உள்ளன, அத்துடன் இலக்கில் (ரேடார்) இருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தன்னிச்சையாகக் கண்டறிந்து தாக்கும் சிறப்பு ரேடாரும் உள்ளது.

இது குறிப்பிட்ட பகுதியில் (டார்கெட்டட் ஏரியா) உள்ள இலக்கைக் குறிவைத்து தாக்கும்படி வடிவமைக்கப்பட்டது. இலக்கின் அதிர்வெண்ணைக் துரத்தி எந்த திசையிலிருந்தும் தாக்கக் கூடியது. இலக்கு வானில் பறந்துகொண்டிருந்தாலும், நிலத்தில் புதைந்திருந்தாலும் இந்த ட்ரோனிலிருந்து தப்ப முடியாது.
இது வானில் ஒன்பது மணிநேரம் தொடர்ந்து பறந்து தாக்குதல் நடத்தும். பகலானாலும் இரவானாலும் துல்லியமாக தாக்கும் திறன் பெற்றுள்ளது.