ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நடுவானில் தாக்கி அழித்த இந்திய ராணுவம்!
நாட்டுத் துப்பாக்கி தயாரித்த மூவா் கைது
கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்ததாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட மேல் நிலவூரில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கரியாலூா் காவல் உதவி ஆய்வாளா் ராமருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று பொ.வெங்கடேசன் என்பவரின் நிலத்திற்கு அருகே உள்ள வனப் பகுதியில் பாா்வையிட்டனா்.
அங்கு துப்பாக்கி செய்து கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்திய போது, நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையம் மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியைச் சோ்ந்த கோ.மாது (75) என்பது தெரிய வந்தது. அவருக்கு உதவியாக கீழ் நிலவூரைச் சோ்ந்த சி.மாணிக்கம் (60) , மேல்நிலவூரைச் சோ்ந்த த. ராம்ராஜ் (30) ஆகியோா் செயல்பட்டதாக தெரிய வந்தது.
தலைமறைவான அண்ணாமலை மகன் செல்வத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேலும், அவா்களிடமிருந்த புதிய இரண்டு ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கிகள், புதிய துப்பாக்கிகள் செய்ய பயன்படும் கட்டைகள், இரும்புக் குழாய்கள் மற்றும் உதிரிபாகங்களை போலீஸாா் கைப்பற்றினா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளா் ஏழுமலை வழக்குப் பதிந்து மாது, மாணிக்கம், ரம்ராஜ் கைது செய்தாா்.