Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!
கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு!
கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மலப்புரம் மாவட்டம் வலஞ்சேரியை சேர்ந்த 42 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் கண்டறியப்பட்ட பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாள்களாக அப்பெண் அதிகப்படியான காய்ச்சல், தொடர் இருமல், கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழந்தின்னி வௌவால்கள், பன்றிகள் மூலமாக நிபா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, உடல் வலி உள்ளிட்டவை நிபா வைரஸ் அறிகுறிகளாகும்.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு