பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53% தேர்ச்சி
திருநெல்வேலி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53 சதவிகிதம் பேர் தேர்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் 187 பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 813 மாணவர்களும், 10 ஆயிரத்து 683 மாணவிகளும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 312 மாணவர்களும், 10,393 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களில் 93.42 சதவிகிதமும் பேரும், மாணவிகளில் 97.29 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவிகள் 95.63 சதவிதம் பேரும், மாணவர்கள் 87.37 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 சதவிதமாக உள்ளது.
மாநில அளவில் 95.53% பேர் தேர்ச்சியுடன் திருநெல்வேலி மாவட்டம் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
வழக்கம்போல, நிகழாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் தென்காசி - 22 ஆவது இடத்தையும், திருநெல்வேலி 16 ஆவது இடத்தையும், தூத்துக்குடி - 9 ஆவது இடம் மற்றும் கன்னியாகுமரி - 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.