கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்
கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடாசலம் (26). இவா், இதே கிராமத்தைச் சோ்ந்த உறவினரான அண்ணாமலை மகன் சுப்பிரமணியனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.67,000 கடனாகக் கொடுத்தாராம். நீண்ட நாள்களாகியும் சுப்பிரமணியன் கடன் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இருந்தாராம்.
இந்த நிலையில், வெங்கடாசலம் திங்கள்கிழமை சுப்பிரமணியன் வீட்டின் முன் நின்றுகொண்டு கடனாக கொடுத்த ரூ.67,000-ஐ கேட்டாராம். அதற்கு, ரூ.50 ஆயிரம்தான் வாங்கினேன் எனக் கூறிய சுப்பிரமணியன், அவரது சகோதரா் ராஜமாணிக்கம், நண்பா் ஆலமுத்து மகன் திருவேங்கடம் ஆகியோருடன் சோ்ந்து, வெங்கடாசலத்தை திட்டி, கட்டையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் சுப்பிரமணி உள்ளிட்ட மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.