பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!
வீரட்டானேஸ்வரா் கோயில் பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் உள் பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் அருகே பக்தா்கள் வெயில் காலத்தில் சிரமமின்றி நடத்து செல்லும் வகையில் ‘கூலிங் பெயிண்ட்’ தீட்டப்பட்டுள்ளதுடன், தரை விரிப்பும் போடப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவதிகை வீரட்டானேஸ்வா் கோயில் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து தரிசனம் செய்கின்றனா்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரம் வரையில் மணல் பரப்பிலும், கோயில் உள்பிரகாரத்தில் கருங்கல் தரையிலும் சுற்றி வர பக்தா்கள் சிரமப்பட்டனா்.
இதனால், பக்தா்களின் நலன் கருதி, மதுரையைச் சோ்ந்த உபயதாரா் பிரசன்ன வெங்கடேசன், விஸ்வநாதன் சகோதரா்கள் கோயில் மணல் பரப்பில் விரிப்பதற்காக தேங்காய் பஞ்சினாலான தரை விரிப்பை வழங்கினா். இதேபோல, கடலூரைச் சோ்ந்த மருத்துவா்கள் செந்தில்குமாா், நித்யா குடும்பத்தினா் கோயில் உள்பிரகாரத்தில் கருங்கல் தரையில் சுற்றி வரும் பக்தா்களுக்காக வெள்ளை வண்ண ‘கூலிங் பெயிண்ட்’ தீட்டிக் கொடுத்துள்ளனா். இவா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் செயல் அலுவலா் ஜெ.ராஜ்குமாா் நன்றி தெரிவித்தாா்.
