செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளோம்.

ஆலோசனைக்கூட்டம்

போர்க்களத்தில் போரிடுவதற்காக இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கு 10 நாள்கள் பயிற்சி அளித்து எனது தலைமையில் போர்க்களத்தில் சண்டையிட 1000 இளைஞர்கள் தயாராக உள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் அ.தி.மு.க.வின் பங்கு நிச்சயம் இருக்கும். அ.தி.மு.க.வினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக யுத்த களத்திற்கு இளைஞர்கள் தேவை என்று சொன்னால் விருதுநகர் மாவட்டத்திலிருந்து இளைஞர்களை அழைத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது. 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தி.மு.க. ஆட்சியில் இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

நீட் ரத்து செய்வதாக கூறினார்கள், ரத்து செய்யவில்லை. தமிழகத்தில் மதுக்கடையை மூடுவோம் என முதல்வர் ஸ்டாலின் சொன்னார், தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளதாக கனிமொழி எம்.பி சொன்னார், ஆனால் மதுக்கடைகளை மூடாமல் மது விற்பனையில் 50 ஆயிரம் கோடி வருவாயை அதிகரித்துள்ளார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், செங்கல் விலை என எல்லாம் சரமாரியாக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் குடும்பத்தை நடத்தலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்பையும் ஸ்டாலின் ஆட்சியின் கஷ்ட காலத்தையும் வகுத்து பார்த்தால் எடப்பாடி பழனிசாமி சொல்வது பொய்யா? அல்லது ஸ்டாலின் சொல்வது பொய்யா? என்ற விவரம் மக்களுக்கு தெரியவரும்.

பேச்சு

முதல்வர் ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார், அது நடக்காது. தி.மு.கவிற்கு சரியான சம்மட்டி அடி அடிப்பார்கள். வரும் குரு பெயர்ச்சியில் தி.மு.க.விற்கு இறங்கு முகம், அ.தி.மு.க.விற்கு ஏறுமுகம். தி.மு.க.வின் ஆட்சியில் முதல்வரை தவிர அரசு ஊழியர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கான பதிலடி 2026 தேர்தலில் அவர்களுக்கு கிடைக்கும்" என கூறினார்.

Operation Sindoor: "இரு நாடுகளையும் நன்கு தெரியும்; அவர்கள்..." - இந்தியா - பாக். குறித்து ட்ரம்ப்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று முன்தினம் (அமெரிக்க நேரப்படி), அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இது ஒரு அவமானம்" என்று பதிலளித்திருந்தார்.மீண்டும், நேற்று ட்ரம்பி... மேலும் பார்க்க

Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு

தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் ... மேலும் பார்க்க

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்... மேலும் பார்க்க

Operation Sindoor: `இந்திய ராணுவ நடவடிக்கையை வரவேற்கிறேன்; அதேசமயம் இது..."- திருமாவளவன் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்க... மேலும் பார்க்க

`போர் வேண்டாம்; பாகிஸ்தான் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எத... மேலும் பார்க்க