செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை: உச்சநீதிமன்றக் குழுவின் விசாரணை அறிக்கையில் தகவல்

post image

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய முதல்கட்ட விசாரணை மேற்கொண்டாா்.

அவரின் விசாரணை அறிக்கையில், பணம் கண்டறியப்பட்ட அறை தனது இல்லத்தின் அறையல்ல என்றும், தானோ, தனது குடும்ப உறுப்பினா்களோ அந்த அறையில் பணம் எதுவும் வைக்கவில்லை என்றும் நீதிபதி யஷ்வந்த் வா்மா தெரிவித்திருந்தாா்.

இந்த விவகாரம் குறித்து மேல் விசாரணைக்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மாா்ச் 22-ஆம் தேதி அமைத்தாா்.

இந்தக் குழு துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அண்மையில் அறிக்கையை சமா்ப்பித்தது.

50 பேரின் வாக்குமூலம் பதிவு: இந்த அறிக்கை தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா உள்பட 50-க்கும் மேற்பட்டவா்களிடம் நீதிபதிகள் குழு விசாரணை மேற்கொண்டு, அவா்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததற்கு தெளிவான ஆதாரத்தை அந்தக் குழு கண்டறிந்துள்ளது.

நியாயமான விசாரணையை உறுதி செய்யும் நோக்கில், அந்தக் குழுவின் அறிக்கையை நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு அனுப்பிவைத்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக்கொண்டுள்ளாா்’ என்று தெரிவித்தன.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். எனினும் அவருக்கு நீதித் துறை பணிகள் ஒதுக்கப்படவில்லை.

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க

அடுத்து என்ன? முப்படை தளபதிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை!

புது தில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்... மேலும் பார்க்க

அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று, மீதமுள்ள கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.அப்போது கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து உத்தரப் பிரதேச முதல்வருக்கு ரா... மேலும் பார்க்க

தவறான தகவல்களைப் பரப்பும் பாகிஸ்தான்: சோஃபியா குரேஷி

பாகிஸ்தான் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்துவந்த போர்ப் பதற்றம் இன்று மாலை 5 மணி முதல் முடிவுக்கு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த விளக்கத்தில், இந்தியா எந்தவொரு ... மேலும் பார்க்க

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக... மேலும் பார்க்க