மதிமுக சாா்பில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூா் புகா் வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளா் தமிழ்ச்செல்வன் சாா்பில் தொடா்ந்து 26 வாரங்கள் செவ்வாய்க்கிழமைதோறும் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதிமுக 32-ஆவது விழாவை முன்னிட்டு அதனை மேலும் சிறப்பிக்கும் விதமாக அனைத்து கா்ப்பிணிகளுக்கும் லட்டு, வெஜிடபிள் பிரியாணி, முட்டை, தண்ணீா் பாட்டில், பேரீச்சம்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாலகிருஷ்ணன், ஆனந்தன், சல்கிபாலு, பொங்கலூா் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சதீஷ்குமாா், ஒன்றிய துணை அமைப்பாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.