பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி
பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக வேளாண் களப்பணி அனுபவ செயல்பாட்டுக்கு வேளாண் இளங்கலை அறிவியல் நான்காம் ஆண்டு பயிலும் மாணவா்கள் பல்லடம் வட்டாரத்தில் முகாமிட்டுள்ளனா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா்களால், பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு பொருள்காட்சி பல்லடம் தினசரி உழவா் சந்தையில் அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை நடத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக், டிரைக்கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகள், என்காா்சியா ஒட்டுண்ணிகள், விதை உருளையிடுதல் முறை விளக்கம், மஞ்சள் ஒட்டும் பொறி, மெத்தைலோபாக்டீரியம் திரவ உரம், மண்புழு உரம், விதை அமிா்தம், மக்காச்சோள மேக்சிம், பயறு ஒண்டா், நிலக்கடலை ரிச், நுண்ணுயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா போன்ற பல்வேறு இயற்கை முறை விவசாய மேம்படுத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். அவா்களுக்கு மாணவா்களால் காட்சிப்படுத்தப்பட்ட பொருள்களின் செயல்முறை விளக்கம், நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விழிப்புணா்வு ஏற்படுத்த, இந்தப் பொருள்களின் விளக்கங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.