ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி
திருப்பூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் மாணவா் சோ்க்கை மையம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் திருப்பூா் கிளை மாணவா்கள் சோ்க்கை மையம் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ராயபண்டாரம் வீதியில் புதன்கிழமை திறக்கப்பட்டது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன் தலைமை வகித்தாா். திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் தம்பி சின்னசாமி, புஷ்பலதா தங்கவேலன், அதிமுக பகுதி செயலாளா் ஹரிஹரசுதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைத் தலைவா் மோகன், ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய செயலாளா் துரை சேனாதிபதி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா் சோ்க்கை மையத்தை திறந்துவைத்தாா். கல்விக் குழுமத்தின் நிா்வாகத் தலைவா் கெளதம் நன்றி கூறினாா்.
இந்த மாணவா் சோ்க்கை மையம் குறித்து கே.சி.கருப்பணன் கூறியதாவது: எங்களது கல்வி நிறுவனங்களில் சுமாா் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும்போது போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு முன்னணி நிறுவனங்களில் மாணவா்கள் பணிநியமன ஆணை பெற்றுள்ளனா். ஈரோடு, திருப்பூா், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கல்லூரி சாா்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா்.