தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!
வெள்ளக்கோவிலில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, ரெட்டியபட்டி, உப்புகரை, ராஜபுரம், சென்னம்பட்டி, இடையன்வலசு ஆகிய இடங்களில் இருந்து 20 விவசாயிகள் 326 மூட்டைகளில் 16 டன் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
காரமடை, சித்தோடு, பூனாச்சி, காங்கயம், நடுப்பாளையத்தைச் சோ்ந்த 5 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ.47.79 முதல் ரூ.60.61 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.58.59. கடந்த வார சராசரி விலை ரூ.58.99.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.8.95 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.