ஆபரேஷன் சிந்தூர்: தமிழ்நாடு உறுதியாக துணைநிற்கும் - முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! - ராகுல்
Tamil Nadu stands with the Indian Army against terrorism. With our Army, for our nation. Tamil Nadu stands resolute.#OperationSindoor
— M.K.Stalin (@mkstalin) May 7, 2025
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
இந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். நாட்டிற்காகவும், ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்று உறுதியுடன் நிற்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.