சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்!
உயா் கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்
சென்னை, மே 3: தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தினாா்.
அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் அவா் பேசியதாவது: சைவ சிந்தாந்தம் தமிழுக்கு அடையாளமாக இருக்கிறது. பக்தி நிலை மூலமாகத்தான் சிவனை அடைய முடியும். பக்தியின் மூலம் ஆன்மிகம் காப்பாற்றப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் சமுதாய வேறுபாடு இல்லை.
சநாதன தா்மம் என்பது ஆன்மிகத்தின் அடையாளமாக இருக்கிறது. அதேபோல் சநாதனம் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துகிறது. ஜம்மு- காஷ்மீா் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் சைவ சிந்தாந்தம் முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது. பிகாரில் உள்ள மாணவா்கள்கூட சைவ இலக்கியங்களைப் படித்துள்ளனா்.
மாநில மொழியில் இலக்கியம் வளா்த்தது சைவ சிந்தாந்தம். அதன்மூலம் எளிய மக்களுக்கும் அது சென்றது. தற்போது ஆன்மிகம் என்பதை அறிவியல்பூா்வமாக இல்லை எனக் கூறி அழிக்க நினைக்கிறாா்கள். இதுபோன்ற தருணத்தில் ஆதீனங்கள் நிகழ்வுகளை தொடா்ந்து கொண்டுசெல்வது அவசியமானது.
தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சைவ சித்தாந்த ஆராய்ச்சிப் படிப்புகளைக் கொண்டு வர வேண்டும்.
சநாதன தா்மத்தால்தான் பாரதம் வாழ்கிறது. நமது தேசம் ஒரு தேசபக்தி நிா்வாகியின் (பிரதமா் மோடி) வழிநடத்தலில் சென்றுகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈா்க்கும் அளவுக்கு நாடு வளா்ந்துள்ளது என்றாா் அவா்.