ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து இன்று விரிவான விளக்கத்தை இந்திய ராணுவம் அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!