இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!
இந்தியா மற்றும் பிரேஸிலில் முதலீடு மோசடி தொடர்பான முகநூல் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.
இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில், மார்ச் மாதத்தில் மட்டும் முதலீடு மோசடி தொடர்பான முகநூலின் 23,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் மற்றும் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, செயல் நுண்ணறிவு உள்பட மற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொருளாதார ஆலோசகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோரின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று பொய்யாக உருவாக்கி, அதன் மூலம் மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரிப்டோகரன்சிகள், பங்குகள், விலையுயர்ந்த பொருள்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிகப்படியான வருவாயை எளிதில் ஈர்க்க முடியும் என்று மக்களை மோசடி வலையில் சிக்க வைக்கின்றனர்.
அவர்களை நம்பி, முதலீடு செய்தவுடன், தங்கள் முகநூல் கணக்குகளையோ தொடர்புகொள்ள பயன்படுத்திய சமூக ஊடகக் கணக்குகளையோ முடக்கி விடுகின்றனர்.
ஆகையால், இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெட்டா நிறுவனம் அறிவுறுத்தியது.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!