செய்திகள் :

கேரளா: கோயில் வளாகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; தட்டிக் கேட்ட சிறுவனைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை அருகே உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.

ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீபா கேரளா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது மகன் ஆதிசேகர்(15) 10-ம்.வகுப்பு படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி ஆதிசேகர் அவரது நண்பர் ஒருவருடன் பூளிக்கோடு கோயில் அருகே விளையாடிவிட்டு, மாலை 5 மணியளவில் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டார்.

அப்போது ஆதிசேகர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பிரியரஞ்சன் என்பவர் ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக்கல் கார் மோதியது. சிறுவன் உடல்மீது கார் ஏறி இறங்கியதில் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தான்.

கைதுசெய்யப்பட்ட பிரியரஞ்சன்
கைதுசெய்யப்பட்ட பிரியரஞ்சன்

இது சாதாரண விபத்து எனப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்பு பிரியரஞ்சன் கோயில் வளாகத்தில் சிறுநீர் கழித்ததாகவும், கோயில் வளாகத்தில் சிறுநீர் கழிக்கலாமா என ஆதிசேகர் கேள்வி எழுப்பியதாகவும், மது போதையிலிருந்த பிரியரஞ்சன் சிறுவனிடம் தகராற்றில் ஈடுபட்டதாகவும், அதை முன்விரோதமாக வைத்துக்கொண்டு கார் ஏற்றிக் கொலை செய்ததாகச் சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

அதில் கோயில் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வெளியே வந்து சைக்கிளை எடுக்கும் வரை சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பிரியரஞ்சன் காத்திருப்பதும், சிறுவன் ஆதிசேகர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சாலையில் வந்ததும் காரை வேகமாக இயக்கிய பிரியரஞ்சன் வேண்டும் என்றே சிறுவன் மீது மோதிய காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் பிரியரஞ்சன் சிறுவன் மீது காரை மோதி கொலை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

சிறுவன் ஆதிசேகர், கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி
சிறுவன் ஆதிசேகர், கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி

அதைத் தொடர்ந்து விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பிரியரஞ்சன் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு திருவனந்தபுரம் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று (மே 6) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பிரியரஞ்சனுக்கு ஆயுள் கடுங்காவல் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு சமூகத்துக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும் என ஆதிசேகரின் தந்தை அருண்குமார் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து கைதுசெய்த போலீஸார்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு... மேலும் பார்க்க

குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குகன்பாறையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலையில், இரவு நேரக் காவலாளியாகத் தூத்துக்குடி... மேலும் பார்க்க

கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.... மேலும் பார்க்க

கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார... மேலும் பார்க்க