திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் ...
குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு குட்கா கடத்தல் நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது..

குறைந்த விலையில் கர்நாடகாவில் குட்கா பொருட்களை வாங்கி இந்த இரண்டு மாநிலங்களிலும் பதுக்கி பல மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக மூன்று மாநில எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் குட்கா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. மொத்தமாக குட்கா பொருட்களை கடத்தும் கும்பல்களை காவல்துறையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள பதிவெண் கொண்ட காய்கறி வாகனம் ஒன்றில் குட்கா பொருட்களை இரண்டு பேர் கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அருவங்காடு காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டு

சம்மந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். காய்கறி வாகனத்தில் வெங்காய மூட்டைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.