வன்னியா் இளைஞா் மாநாடு: கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
18 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகா் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட், பிகானீா், குவாலியா் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன; இந்த விமான நிலையங்களில் இருந்து புறப்படும், வந்தடையும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.
ஏா்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை மே 10-ஆம் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்: பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவுதால், பஞ்சாப், ராஜஸ்தானில் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானுடன் பஞ்சாப் 425 கி.மீ., ராஜஸ்தான் 1070 கி.மீ. எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன.
பஞ்சாப் எல்லை கிராமங்களில் அமைதி: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தீவிர பதற்றம் நிலவும் நிலையில், பஞ்சாபில் அமிருதசரஸ், தரண் தாரன் மாவட்ட எல்லை கிராமங்கள் அமைதியாக காணப்பட்டன. மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளை வழக்கம் போல் மேற்கொண்டனா்.