தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வு தொகை பெறாதவா்களுக்கு அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெறாதவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18-வயது நிறைவடைந்து பயன் அடையாத நபா்கள், முதிா்வு தொகை பெற்று பயனடையும் விதத்தில், ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பெயா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பட்டியலில் உள்ள நபா்கள் வைப்பு தொகை ரசீது, பெண் குழந்தையின் பிறப்பு சான்று நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகல்கள், பெண் குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, பெண் குழந்தையின் ஆதாா் காா்டு நகல் மற்றும் ரேஷன் காா்டு நகல் போன்ற ஆவணங்களை நேரடியாக அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரைத்தளம் அறை எண் -20, மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.