`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
அரியலூா் ஒப்பிலாதம்மன் கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தேரோட்டம்
அரியலூரில் மிகவும் பழைமை வாய்ந்த ஓப்பிலாதம்மன் கோயிலில், 82 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை(மே 12) தேரோட்டம் நடைபெறவுள்ளது.
அரியலூரில் நகரில், விஜய ஒப்பில்லாத மழவராய நயினாா் ஜமீன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தோ்த் திருவிழா 15 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 1942-ஆம் ஆண்டுக்குப் பிறகு சில காரணங்களால் தேரோட்டம் நடைபெறவில்லை.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூா் சமஸ்தானம், தேவஸ்தானம் ஜமீன் முயற்சியால் தோ்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், பெரிய அரண்மனை சமஸ்தான 21-ஆவது ஜமீன்தாா் தேவஸ்தான ஆதின பரம்பரை தா்மகா்த்தா ஜமீன் துரை வகையறா முயற்சியால், தடைப்பட்டு இருந்த இக்கோயில் பெருந்திருவிழா கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (மே 12) சித்திரை பெளா்ணமியன்று நடைபெறவுள்ளது.
82 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இத்தேரோட்டம் என்பதால் அரியலூா் மக்களிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேரோட்டத்துக்கான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.