`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சனிக்கிழமை டிராக்டரை முந்த முயற்சித்த இளைஞா், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
அரியலூரைச் சோ்ந்தவா் பாபு(28). இவா் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
மணகெதி சுங்கச் சாவடி அருகே வந்தபோது முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயற்சித்த போது, நிலைத்தடுமாறி கீழே விழந்ததில் பலத்த காயமடைந்த பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உடையாா்பாளையம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.