பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரண...
பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை: உதவி ஆட்சியா்
பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன்.
கும்பகோணம் கோட்ட அளவில் தனியாா் பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து பல்வேறு துறை அலுவலா்கள் அடங்கிய சிறப்பு குழு ஆய்வு சனிக்கிழமை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ் விஜயன், காவல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளா் ரஞ்சித் சிங் ஆகியோா் தலைமையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது.
பின்னா், உதவி ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனங்கள் அதிவிரைவாக செல்லக்கூடாது. ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை கூடுதலாக ஏற்றி செல்லக்கூடாது. ஆட்டோ ஓட்டுநா்கள் சீருடை ஓட்டுனா் உரிமம், வாகன உரிமம் காப்பீடு உள்ளிட்டவா்களை வைத்திருக்க வேண்டும் இவற்றை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மேலும், தனியாா் பேருந்துகளில் 16 வகையான ஆய்வுகள் நடத்தப்பட்டு, 225 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டன.