Ind - Pak Ceasefire திடீர் அமைதி உடன்படிக்கை - என்ன நடந்தது? | Explained
தஞ்சாவூா் மாவட்டத்தில் 35 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து
தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 35 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டன.
தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மைதானம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சாா்பில் அந்தந்த பகுதியிலுள்ள பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
இதில், பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டள்ளதா? பாதுகாப்பு, தீ தடுப்பு கருவி, முதலுதவி பெட்டி போன்றவை சரியாக உள்ளதா? உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
தஞ்சாவூரில் 269 வாகனங்களும், கும்பகோணத்தில் 158 வாகனங்களும், பட்டுக்கோட்டையில் 245 வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தஞ்சாவூரில் 10 வாகனங்களுக்கும், கும்பகோணத்தில் 7 வாகனங்களுக்கும், பட்டுக்கோட்டையில் 18 வாகனங்களுக்கும் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டன.
தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்டத் தீயணைப்பு அலுவலா் ச. குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப. ஜெய்சங்கா், முதன்மைக் கல்வி அலுவலா் இரா. அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
