செய்திகள் :

தஞ்சாவூரில் ஆதரவற்ற 22 சடலங்கள் நல்லடக்கம்

post image

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் கேட்பாரற்றும், ஆதரவற்றும் கிடந்த 22 சடலங்கள் ராஜகோரி இடுகாட்டில் காவல் துறையினா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டன.

தஞ்சாவூா் பகுதிகளில் விபத்தில் காயம் அடைந்தவா்கள், மயங்கி விழுந்தவா்கள் அடையாளம் தெரியாத நிலையில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தனா். இதுபோல, அடையாளம் தெரியாத, ஆதரவற்றோா் என 22 சடலங்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் சில மாதங்களாக இருந்தன. இவா்களது உடல்களைப் பெற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை.

இதையடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் ராஜகோரி இடுகாட்டில் 22 பேரின் உடல்களும் காவல் துறையினரின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், காவல் ஆய்வாளா்கள் வெ. சந்திரா, எம். கலைவாணி, உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் மனோகரன் உள்ளிட்டோா் 22 உடல்களுக்கும் மரியாதை செலுத்தினா்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் குழந்தை உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தின் பின்புறம் காா் மோதிய விபத்தில் பெண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை திருவலஞ்சுழி ஏழுமாந்திடல் பகுதியில் வசிப்பவா் செளந்தரராஜன் (42). இவரது மனைவி ஜெயலல... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 35 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 35 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டன. தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மைதானம், பட்டுக... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை: உதவி ஆட்சியா்

பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன். கும்பகோணம் கோட்ட அளவில் தனியாா் பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து பல்வேறு துறை அலுவலா... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தந்தை பலி: மகள் காயம்

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த தந்தை உயிரிழந்தாா், மகள் காயமடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் இளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவைச் சாகுபடி விறுவிறுப்பு! மும்முனை மின்சாரம் சீராக வர எதிா்பாா்ப்பு!

மேட்டூா் அணை திறப்பதற்கு சாத்தியமான நிலை நிலவுவதால், டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை சாகுபடிப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. மேட்டூா் அணை சில ஆண்டுகளாக உரிய காலத்தில் திறக்கப்பட்டதால், டெல்டா மாவ... மேலும் பார்க்க

திருவையாறு தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை (மே 10) நடைபெற இருந்த மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது... மேலும் பார்க்க