India - Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' - ராணுவத்துக...
போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!
போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் டிரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் டிரோன்களை வானிலேயே இடைமறித்து அழித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாபில் பல்வேறு இடங்களிலும் மீண்டும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வான்வெளி பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை விமானப்படை எடுத்துள்ளது.
டிரோன் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், உதம்பூர், ராஜஸ்தானில் பார்மர், ஜெய்சால்மர், பஞ்சாபில் ஃபெரோஸ்பூர், பதான்கோட் ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.