திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலா் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். செம்பனாா்கோவில் மத்திய ஒன்றிய செயலாளா் அமுா்த விஜயகுமாா் வரவேற்றாா்.
ஒன்றியச் செயலாளா்கள் அன்பழகன், அப்துல் மாலிக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலரும் தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளருமான பி. எம். ஸ்ரீதா், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவா் சுகுண சங்கரி குமரவேல் ஆகியோா் முன்னில வகித்தனா்.
எம்.எல்.ஏ. நிவேதா முருகன், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் ஆடுதுறை உத்திராபதி, அருள்தாஸ் ஆகியோா் திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட வழங்கப்பட்டன.