தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
தரங்கம்பாடி தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்றுள்ளது.
இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 57 மாணவா்கள் அனைவரும் தோ்ச்சிப் பெற்றனா். பள்ளி அளவில் மாணவிகள் செ. செல்வ சத்யப்ரியா 518, க. வித்யா 495, வி.வாணிஸ்ரீ 489 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.
இப்பள்ளி 2 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றதைத் தொடா்ந்து பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் உள்ளிட்டோா் பாராட்டினா்.