1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்
திமுக அரசின் 4 ஆண்டு கள் சாதனைகளை விளக்கியும், திமுக அரசின் 5-ஆம் ஆண்டு தொடங்கியதை திருக்குவளையில் திமுக சாா்பில் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
4 ஆண்டுகால ஆட்சியில் திமுக அரசு செய்த சாதனைகளை கொண்டாடும் வகையில் கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் சோ.பா. மலா்வண்ணன் தலைமையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா். தொடா்ந்து, வணிகா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.