நுகா்வோரின் மின் கட்டணம் மே-ஜூன் காலகட்டத்தில் 7-10 சதவீதம் வரை உயா்த்தப்படும்!
மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இந்த நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கே.சி.பி (பி.டபிள்யூ.ஜி) அமைப்பின் 2 உறுப்பினர்களான இம்பால் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிங்தோஜம் கிரண் மெய்டேய் என்ற பொலினாவோ (29) மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சொரோகைபாம் இனோச்சா சிங்கை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்,
கைது செய்யப்பட்ட இருவரும் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள பொதுமக்களிடமிருந்து மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் 2 செல்போன், ஆதார் அட்டை, கார் ஆகியவை தேடுதல் வேட்டையின்போது மீட்கப்பட்டன.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1965 இந்தியா – பாகிஸ்தான் போரும் இன்றும்!