தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
அதிவேக ஹாட்ரிக் கோல்..! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய அலெக்சாண்டர் சோர்லோத்!
லா லீகா கால்பந்து தொடரில் அதிவேகமாக ஹாட்ரிக் கோல் அடித்து அத்லெடிகோ மாட்ரிட் வீரர் அலெக்சாண்டர் சோர்லோத் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
லா லீகா கால்பந்து தொடரில் அத்லெடிகோ மாட்ரிட், ரியல் சோசிடாட் அணிகள் இன்று மோதின.
இந்தப் போட்டியில் அலெக்சாண்டர் சோர்லோத் 7,10,11 ஆவது நிமிஷங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் அவர் மொத்தமாக 4 கோல்கள் அடித்தார். இறுதியில் 4-0 என அத்லெடிகோ மாட்ரிட் அபார வெற்றி பெற்றது.
நார்வே நாட்டைச் சேர்ந்த 29 வயதான அலெக்சாண்டர் சோர்லோத் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக 2024 முதல் விளையாடி வருகிறார்.
இந்த சீசனில் லா லீகா தொடரில் 32 போட்டிகளில் 17 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்பாக 1941ஆம் ஆண்டு 15 நிமிஷங்களில் ஹாட்ரிக் கோல் அடிக்கப்பட்டது. தற்போது, இந்தச் சாதனையை அலெக்சாண்டர் சோர்லோத் முறியடித்துள்ளார்.
லா லீகா புள்ளிப் பட்டியலில் அத்லெடிகோ மாட்ரிட் 70 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது.
#AtletiRealSociedad | #LALIGAEASPORTS | #DesenlaceLALIGApic.twitter.com/SrUcSE6nux
— LALIGA (@LaLiga) May 10, 2025