`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
சித்திரைத் தேரோட்ட 6ஆவது நாள்: புன்னை மர சேவையில் காட்சி அளித்த சென்னகேசவப்பெருமாள்
சங்ககிரி மலைமீது உள்ள சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்ட 6ஆவது நாளையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் புன்னை மர சேவை நடைபெற்றது.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில் சென்னகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து சென்னசேகவப்பெருமாள் உற்சவமூா்த்தி புன்னை மர சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமிக்கு தேங்காய், பழங்களை படைத்து வழிபட்ட ஆயிரம் பக்தா்களுக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் இலவசமாக மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன. பக்தா்களுக்கு கேசரி, புளியோதரை வழங்கப்பட்டது. இரவு சுவாமி ராஜஅலங்காரத்தில் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தாா். வியாழக்கிழமை மாலை சுவாமி தங்கு மண்டபத்தில் சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.