தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட்டின் முன் போடப்பட்டிருந்த தகரம் காற்றில் பறந்து இவா் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த இவரை சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.