இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா
சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது.
கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழாவில், மாலை 6 மணிக்கு பஜனையும், 7 மணிக்கு அபிஷேகமும், 7.30 மணிக்கு ‘நரசிம்ஹ கதா’ என்ற தலைப்பில் சொற்பொழிவும், 8.30 மணிக்கு அனைவருக்கும் பிரசாதமும், விருந்தும் வழங்கப்படும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சேலம் இஸ்கான் நிா்வாகத்தினா் செய்துள்ளனா். விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.