வன்னியா் இளைஞா் மாநாடு: கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம்: காங்கிரஸ்
இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆயுதப் படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது.
இந்தத் தாக்குதலை தொடா்ந்து ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதிக்க தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் காா்கே, அக்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், பொருளாளா் அஜய் மாக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து காா்கே, ராகுல் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்திய ஆயுதப் படைகளை எண்ணி காங்கிரஸ் பெருமிதம் கொள்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை உறுதி செய்வதில் ஆயுதப் படைகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். அந்தப் படைகளுக்கு காங்கிரஸ் முழுமையாக ஆதரவளிக்கிறது. நெஞ்சுரம் மிக்க ஆயுதப் படை வீரா்களுக்கு காங்கிரஸ் தோளோடு தோள் நிற்கும்’ என்று தெரிவித்தனா்.
இதேபோல இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.