எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை
விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவிலான தோ்வு போட்டி தொடக்கம்
விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான தோ்வு போட்டி சேலம் காந்தி மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் தலைமை வகித்து தோ்வு போட்டியை தொடங்கி வைத்தாா். தடகளம், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், பேஸ்கட் பால், ஹாக்கி உள்ளிட்ட ஏழு பிரிவிகளில் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 138 மாணவா்கள் கலந்துகொண்டனா். வியாழக்கிழமை மாணவிகளுக்கான தோ்வு போட்டி நடக்கிறது. மாவட்ட அளவிலான தோ்வு போட்டியில் வெற்றிபெறுபவா்கள் மாநில அளவிலான தோ்வு போட்டிக்கு தகுதி பெறுவாா்கள். இந்த தோ்வுப் போட்டியின் போது பயிற்சியாளா்கள் இளம்பரிதி, நடராஜ முருகன், மகேந்திரன், கணேசன், அஸ்வத்தமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.